கோலாலம்பூரில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு

கோலாலம்பூரில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு

1 mins read
88ee5798-96ee-4f74-9513-8227dfcd86a2
பாஹாங்கில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஊழியர் ஒருவர் முட்டைகளை அடுக்குகிறார். கோலாலம்பூரின் சில இடங்களில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.படம்: எஎஃப்பி -

கோலா­லம்­பூர்: மலே­சிய தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரின் சில இடங்­களில் முட்­டைத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு உட­ன­டி­யா­கத் தீர்வு காணப்­படும் என்று கூறி­யுள்ள உள்­நாட்டு வர்த்­தக, பய­னீட்­டா­ளர் விவ­கார அமைச்சு, அச்­சத்­தில் முட்­டை­களை வாங்­கிக் குவிக்க வேண்­டாம் என கேட்­டுக் கொண்­டது.

அமைச்சு நேற்று மேற்­கொண்ட சோத­னை­யில் சில இடங்­களில் முட்­டைத் தட்­டுப்­பாடு நில­வு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நியூ ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு குறிப்­பிட்­டது.

"ஆமாம், நாங்­கள் சோதனை செய்­த­தில் உண்­மை­யி­லேயே குறிப்­பாக, மாலை வேளை­யில் முட்­டை­கள் கிடைக்­க­வில்லை. சில கடை­கள் ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ளர் களுக்­கும் முட்­டை­களை வாங்க வரம்பு விதித்­துள்­ளது," என்று அமைச்­சின் கோலா­லம்­பூர் பிரி­வின் இயக்­கு­ந­ரான அரி­ஃபின் சம்­சு­தின் தெரி­வித்­தார். கோலா­லம்­பூ­ரில் முட்டை பற்­றாக்­குறை பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண இதர மாநி­லங்­க­ளி­லி­ருந்து கூடு­த­லாக உள்ள முட்­டை­களை தரு­விப்­பது குறித்து ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். கோலா­லம் பூரில் போது­மான முட்­டை­கள் இருப் பதை உறுதி செய்­வோம். ஆனால் பயத்­தில் முட்­டை­களை தேவைக்கு அதி­க­மாக வாங்க வேண்­டாம் என்று கூறிய அவர், இது, நிலைமை யை மேலும் மோச­மாக்­கும் என்று எச்­ச­ரித்­தார். "அன்­றா­டத் தேவைக்கு மட்­டுமே முட்­டை­களை வாங்­குங்­கள். ஒரு டஜன் முட்டை தேவைப்­பட்­டால் அதற்கு மேல் வாங்­கா­தீர்­கள் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.