கைப்பெட்டியில் குழந்தைகளின் சடலம்; தாயார் மீது கொலைக் குற்றச்சாட்டு

கைப்பெட்டியில் குழந்தைகளின் சடலம்; தாயார் மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
94f9e239-b850-44c6-9c0f-bda27c253ff0
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் கைப்­பெட்­டி­யில் இரு குழந்­தை­க­ளின் எலும்­பு­கள் கண்டு பிடிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து தென்­கொ­ரி­யா­வில் 42 வயது குழந்தைகளின் தாயார் கைது செய்­யப்­பட்டு ஆக்­லாந்­துக்கு கொண்டு வரப்­பட்­டார்.

குழந்­தை­க­ளின் பெய­ரையோ அல்­லது தாயார் பற்­றிய விவ­ரங்­க­ளையோ வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

அவ­ரி­ட­மி­ருந்து ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் பெறப்பட­வில்லை. வழக்கு விசா­ரணை டிசம்­பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

கடந்த செப்­டம்­பர் மாதம் தென்­கொ­ரி­யா­வில் உள்ள துறை­முக நக­ர­மான உல்­சா­னில் மாதை தென்­கொ­ரிய காவல்­து­றை­ யி­னர் கைது செய்­த­னர்.

காவல்­துறை வாக­னத்­தில் ஏற்­றி­ய­போது 'நான் செய்­ய­வில்லை' , 'நான் செய்­ய­வில்லை' என்று அந்த மாது கூறி­னார்.

பிள்­ளை­களின் வயது ஐந்து முதல் பத்து வரை­யில் இருக்­க­லாம் என்று காவல்­துறை தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கைவி­டப்­பட்ட பொருள்­களை இணை­யம் வழி­யாக வாங்­கிய ஒரு குடும்­பம் கைப்­பெட்­டி­யில் குழந்தைகளின் சட­லங்­கள் இருப் ­ப­தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­த­னர்.

கைப்­பெட்­டி­யில் சட­லங்­கள் பல ஆண்­டு­கள் இருந்­தி­ருக்­க­லாம் என்று காவல்­துறை தெரி­விக்­கிறது. கைப்­பெட்­டி­யில் இருந்த சட­லங்­க­ளுக்­கும் அதனை வாங்­கிய குடும்­பத்­துக்­கும் தொடர்­பில்லை என்­பது விசா­ர­ணை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.