‘ஹிஜாப்’ விவகாரம்: 3 நாள் வேலை நிறுத்தம் கோரும் ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

துபாய்: ஈரா­னின் நன்­ன­டத்­தைக் காவல் படை கலைக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்டு அர­சாங்­கத் தரப்பு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­ததை அடுத்து, இவ்­வா­ரம் மூன்று நாள் வேலை நிறுத்­தத்­தில் ஈடு­ப­டு­மாறு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கோரி வரு­கின்­ற­னர்.

‘ஹிஜாப்’ எனும் தலை­யங்­கி­யைச் சரி­யாக அணி­யா­த­தா­கக் கூறி, 22 வயது குர்­தி­யப் பெண்­ணான மஹ்சா அமினி என்­ப­வரை இந்த நன்­ன­டத்­தைக் காவல் படை­யி­னர் செப்­டம்­பர் 13ஆம் தேதி­யன்று கைது­செய்­தி­ருந்­த­னர். அதை­ய­டுத்து தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்ட அவர், மூன்று நாட்­க­ளுக்­குப் பிறகு இறந்­து­விட்­டார்.

அதை­ய­டுத்து நாட்­டில் ஆர்ப்­பாட்­டங்­கள் வெடித்­த­தைத் தொடர்ந்து நன்­ன­டத்­தைக் காவல் படை கலைக்­கப்­பட்­டு­விட்­ட­தாக நேற்று முன்­தி­னம் தெரி­விக்­கப்­பட்­டது.

இக்­கா­வல் படை உள்­துறை அமைச்­சின்­கீழ் இயங்கி வந்த நிலை­யில், கலைக்­கப்­பட்­டதை அமைச்சு இன்­னும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன் காவல் படையை மேற்­பார்­வை­யி­டும் பொறுப்பு, அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் முகம்­மது ஜஃபார் மொண்­டா­ஸே­ரி­யு­டை­யது அல்ல என்­றும் ஈரா­னின் அதி­கா­ரத்­துவ ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தலை­யங்கி அணி­யும் கட்­டாய சட்­டத்தை அர­சாங்­கம் மீட்­டுக்­கொள்­ளாது என்று பல்­வேறு ஊடக நிறு­வ­னங்­களும் தெரி­வித்­துள்­ளன.

இதை­ய­டுத்து, ஈரா­னின் சம­யத் தலை­வர்­க­ளுக்­குச் சவால் விடுக்­கும் வகை­யில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மூன்று நாள் வேலை நிறுத்­தம் கோரி­யுள்­ள­னர்.

ஈரா­னிய நக­ரங்­கள் பல­வற்­றில் நேற்று கடை­கள் திறக்­க­வில்லை என்று ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!