ஜகார்த்தா: இந்தோனீசியா தன்னுடைய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் பல மாற்றங்களைச் செய்யும் அளவுக்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தங்களை நிறைவேற்றி இருக்கிறது.
திருமணத்திற்கு முந்தைய உடலுறவை சட்டவிரோதமான செயல் என்று வகைப்படுத்தும் ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது.
இதனிடையே, வலசாரி அமைப்புகள் அந்தத் திருத்தங்களுக்கு எதிராக போராட்டங்களை கையில் எடுத்து இருக்கின்றன.
மக்களின் உரிமைகள் நசுக்கப்படுவதாக அவை தெரிவித்தன.
இந்தோனீசியாவில் ஆண்-ஆண் ஒருபால் திருமணத்திற்கு அனுமதி கிடையாது. புதிய சட்டங்கள் அந்த நாட்டில் வசிக்கும் வழக்கத்திற்கு மாறான ஓரின ஈர்ப்பாளர்கள் (LGBTQ) மீது கடுமையான தாக்கத்தை விளைவிக்கும் என்றும் அத்தகைய வலசாரிகள் அஞ்சுகிறார்கள்.