பங்ளாதே‌‌‌ஷில் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

1 mins read
dc98ada1-8848-43de-af9a-093df2ee436f
-

பங்ளாதே‌ஷில் நடப்பு அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியான பங்ளாதே‌ஷ் தேசியவாதக் கட்சிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. சென்ற செவ்வாய்க்கிழமையன்று எதிர்க்கட்சியின் அலுவலகத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கினர். வன்முறையைத் தூண்டியதாக நேற்று முன்தினம் இரண்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று டாக்காவில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பிரதமர் ‌ஷேக் ஹசினாவின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

படம்: இபி‌ஏ