சீனா செல்லும் அமெரிக்க உயர்மட்ட பேராளர் குழு

சீனா செல்லும் அமெரிக்க உயர்மட்ட பேராளர் குழு

2 mins read
23355640-1833-4cc2-aeea-53a2d193a872
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் உயர்­மட்ட பேரா­ளர் குழு ஒன்று விரை­வில் சீனா செல்­கிறது.

அண்­மை­யில் பாலித் தீவில் நடை­பெற்ற மாநாட்­டின்­போது அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் சந்­தித்­துப் பேசி­னர். இதை­ய­டுத்து அமெ­ரிக்க மூத்த பேரா­ளர் குழு­வின் சீனா பயணம் அமை­கிறது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­க­னும் அடுத்த ஆண்டு சீனா செல்­கி­றார். அதற்கு முன்­னேற்­பா­டா­க­வும் குழு­வின் பயணம் இடம்­பெ­று­கிறது என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

முன்­ன­தாக வெள்ளை மாளி­கை­யின் மூத்த பேச்­சா­ளர் ஒரு­வர், உள்­நாட்­டுப் பொரு­ளி­யல் சவால் ­க­ளை­யும் ஆசிய எதிர்ப்­பு­க­ளை­யும் எதிர்­கொள்­வ­தால் குறு­கிய காலத்­தில் அமெ­ரிக்­கா­வு­டன் உறவை சீர்­ப­டுத்­திக்­கொள்ள சீனா விரும்பு­ வ­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு மன்­றத்­தின் இயக்­கு­ந­ரான லாரா ரோசன்­பர்­கர் தலை­மை­யில் குழு சீனா செல்­கிறது. இக்­குழு, நேற்று முதல் வரும் 14ஆம் தேதி வரை சீனா மட்­டு­மல்­லா­மல் தென்­கொரியா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளுக்­கும் செல்­கிறது.

கடந்த மாதம் இந்­தோ­னீ­சி­யா­வில் நடை­பெற்ற ஜி20 மாநாட்­டை­யொட்டி சந்­தித்த அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீனா அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் தைவான், வட­கொ­ரியா விவ­கா­ரங்­கள் பற்றி பேச்சு நடத்­தி­னர். அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே புதிய பனிப்­போர் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்­கும்­வி­த­மாக இந்­தப் பேச்சு இடம்­பெற்­றது.

மனித உரிமை மீறல், உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு மற்­றும் பொரு­ளி­யல் பிரச்­சி­னை­களில் கருத்து வேறு­பா­டு­கள் நிலவி வரும் வேளை­யில் அடிக்­கடி தொடர்­பு­கொண்டு பேச இரு தலை­வர்­களும் உறுதி தெரி­வித்­த­னர்.

இரு நாடு­க­ளுக்கு இடையே போட்­டியை பொறுப்­பு­டன் நிர்­வ­கிக்­க­வும் ஒத்­து­ழைப்­புக்­குச் சாத்­தி­ய­மான துறை­களை ஆரா­ய­வும் பேரா­ளர் குழு பேச்சு நடத்­தும் என்­றும் திரு பிளிங்­க­னின் சீனப் பய­ணத்­திற்கு இக்­குழு அடித்­த­ளத்தை அமைக்­கும் என்­றும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.