கோத்தா கினபாலு: சாபா பெர்சத்துக் கட்சி தொடர்ந்து இருக்கும் என்று பெர்சத்துக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் நேற்று தெரிவித்தார்.
பிரதான பெர்சத்துக் கட்சியிலிருந்து சாபா பெர்சத்துக் கட்சி விலகிவிட்டதாக நேற்று முன்தினம் சாபா பெர்சத்துக் கட்சியின் தலைவரும் சாபா மாநில முதல்வருமான ஹாஜிஜி நூர் அறிவித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து சாபா பெர்சத்துக் கட்சி தொடர்ந்து செயல்படும் என்று முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
"ஹாஜிஜியும் அவரது ஆதரவாளர்களும் பிரதான கட்சியி லிருந்து விலகுவதாக அறிவித்தாலும் சாபா பெர்சத்து தொடர்ந்து இருக்கும்," என்று பிரதான பெர்சத்துக் கட்சி வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மாநிலத் தலைவர்கள், கிளைகளின் தலைவர்கள் கட்சியின் தலைமையால் நியமிக்கப்படு கின்றனர். அதனை மாற்றும் அதிகாரம் கட்சி உச்சமன்றத்துக்கே உள்ளது என்று திரு முகைதீன் குறிப்பிட்டார்.
சாபா பெர்சத்து இனி பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரோனால்ட் கியன்டி தலைமையில் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

