பேங்காக்: தாய்லாந்தில் தக்சின் தொடர்புடைய கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளது. அடுத்த அரசாங்கத்தை அது அமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுடன் நெருங்கிய தொடர்புடைய தற்போதைய எதிர்க்கட்சியான பியூ தாய் கட்சிக்கு அடுத்த தேர்தலில் அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 1,310 பேரில் 73 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கட்சி நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று சிலரும் அதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மற்ற சிலரும் கூறியுள்ளனர்.
தேசிய மேம்பாட்டு நிர்வாகக் கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்துக்கு அடுத்த அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் 31 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

