சீனாவில் குழப்பம் பெருகுகிறது

சீனாவில் குழப்பம் பெருகுகிறது

2 mins read
a4bcb727-307e-4f18-8ec8-5c59e080d1b0
-

பெய்­ஜிங்: சீனா­வில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கடந்த வாரம் திடீ­ரென்று தளர்த்­தப்­பட்ட நிலை­யில், வீடு­க­ளி­லும் அலு­வ­ல­கங்­க­ளி­லும் கிருமி தீப்­போல பரவி வரு­கிறது.

மருத்­து­வ­ம­னை­களில் காய்ச்­ச­லுக்­காக அமைக்­கப்­பட்­டுள்ள மருந்­த­கங்­க­ளி­லும் கூட்­டம் அலை­மோ­து­கிறது. மருந்­து­க­ளைப் பெற நீண்ட வரி­சை­களில் பொது­மக்­கள் காத்­தி­ருக்­கின்­ற­னர். சீனா­வின் மருத்­து­வக் கட்­ட­மைப்பு பெரும் அழுத்­தத்­தில் உள்­ளது.

குறிப்­பாக பெய்­ஜிங்­கில் தொற்று எண்­ணிக்கை பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளது. அங்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 1,133 பேருக்­குத் தொற்று என்று அர­சாங்­கம் கூறி­யது.

ஆனால் தொற்று பன்­ம­டங்கு இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

பெய்­ஜிங்­கின் அவ­சர உத­வித் தொலை­பேசி சேவைக்கு அதி­க­மா­னோர் அழைத்து வரு­வ­தால், அழைப்­பு­க­ளைத் தவிர்க்­கும்­படி அதி­கா­ரி­கள் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர். உண்­மை­யில் உதவி தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு அது கிடைக்­கா­மல் போகக்­கூ­டும் என்று அவர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

சீனா­வின் பல இடங்­களில் விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. கரு­வி­க­ளுக்­கான தேவை­யும் அவற்­றின் விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. பற்­றாக்­குறை நீங்க இரு மாதங்­கள் பிடிக்­கும் என்று தக­வல்­கள் கூறின.

பெய்­ஜிங்­கின் சில மருத்­து­வ­ம­னை­களில் விடுப்­பில் இருந்த மருத்­து­வர்­களும் தாதி­களும் மீண்­டும் பணிக்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சில இடங்­களில் கொவிட்-19 தொற்று ஏற்­பட்டு, இலே­சான அறி­கு­றி­கள் உள்ள மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் வேலைக்கு வரும்­படி கூறப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ரான பர­வ­லான ஆர்ப்­பாட்­டங்­க­ளின் காண­ர­மாக சீனா அவற்­றைத் தளர்த்தி வரு­கிறது. ஆனால் அது அவ­ச­ர­க­தி­யில் நிகழ்­வ­தாக கவலை ஏற்­பட்­டுள்­ளது.

இருந்­த­போ­தும், சீனா தொடர்ந்து கட்­டுப்­பா­டு­களை தளர்த்தி வரு­கிறது. கிருமி தொற்­றி­யோ­ரின் தொடர்­பு­க­ளைக் கண்­டு­பி­டிக்க, சீன மக்­கள் செல்­லும் இடங்­க­ளைக் கண்­கா­ணிக்­கும் கைப்­பேசி செயலி ரத்து செய்­யப்­பட்­டது.