இந்தோனீசியா: பயணிகள் பயப்பட வேண்டாம்

இந்தோனீசியா: பயணிகள் பயப்பட வேண்டாம்

1 mins read
5029869f-8c99-47b3-99c7-0433b7b91ceb
-

ஜக்கார்த்தா: இந்தோனீசிய நாடாளுமன்றம் அண்மையில் ஏற்றுக்கொண்ட குற்றவியல் சட்டங்களின்கீழ், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் இல்லை என்று அந்நாட்டுச் சட்ட, மனித உரிமைகள் துணை அமைச்சர் எட்வர்ட் ஓமார் ஷரீஃப் ஹியரியஜ் கூறியுள்ளார்.

திருமணமாகாமல் பாலியல் உறவு கொள்வதைக் குற்றமாக்கும் புதிய சட்டம், பயணிகளிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர், வாழ்க்கைத் துணைகள், பிள்ளைகள் மட்டுமே அதன் தொடர்பில் புகாரளிக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டிய திரு ஹியரியஜ், பயணிகளுக்கு எதிராக அத்தகைய புகார்கள் எழும் சாத்தியம் இல்லை என்றார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அஞ்சவேண்டாம் என்றும் இந்தோனீசியாவுக்கு வருவதை நிறுத்தவேண்டாம் என்றும் அவர் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.