மும்முரமாக உதவி திரட்டும் உக்ரேன்

மும்முரமாக உதவி திரட்டும் உக்ரேன்

1 mins read
29c7243c-e14e-43d7-8874-d266f6a286ad
-

கியவ்: ரஷ்­யா­வுக்கு எதி­ராக உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி மீண்­டும் அர­ச­தந்­திர முயற்­சி­களை அதி­க­ரிக்­கும் நோக்­கில் அமெ­ரிக்கா, துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடு­க­ளின் தலை­வர்­க­ளு­டன் பேச்சு­ வார்த்தை நடத்­தி­யுள்­ளார்.

திரு ஸெலன்ஸ்­கி­யு­டன் பேசிய அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், உக்­ரே­னின் ஆகா­யத் தற்­காப்பை பலப்­ப­டுத்த அமெ­ரிக்கா உத­வி­செய்­யும் என்று உறுதி தந்துள்ளார்.

ஜிஏழு நாடுகள், ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஆகி­யவை நேற்று நடத்­திய கூட்­டங்­களில் ரஷ்யாமீது கூடு­தல் பொரு­ளி­யல் தடை­களை விதிப்­பது, உக்­ரேனை மறு­நிர்­மா­ணிக்க நிதி வழங்­கு­வது ஆகி­யவை பற்றி பரி­சீ­லிக்­கப்­பட்டன.

இந்­நி­லை­யில் ரஷ்­யப் படை­கள் கிழக்கு, தெற்கு உக்­ரே­னில் கடும் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­வ­தாக உக்­ரே­னிய அர­சாங்­கம் கூறி­யுள்­ளது. கியவ் மற்­றும் அதன் சுற்­று­வட்­டா­ரங்­களில் உள்ள பல மில்­லி­யன் பேருக்கு மின்­சா­ரத் தொடர்பு மீண்­டும் கிடைத்­த­பா­டில்லை.