குவீன்ஸ்லாந்தில் துப்பாக்கிச் சூடு

குவீன்ஸ்லாந்தில் துப்பாக்கிச் சூடு

1 mins read
6d14ca3f-5118-4a97-9500-b7029f544d70
-

பிரிஸ்­பேன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவீன்ஸ்­லாந்து மாநி­லத்­தில் உள்ள ஒதுக்­குப்­பு­ற­மான வீடு ஒன்­றில் நடந்த துப்­பாக்­கிச் சூடு சம்­ப­வத்­தில் காவல்­து­றை­ அதிகாரிகள் இரு­வ­ரும் பொது­மக்­களில் ஒரு­வரும் கொல்­லப்­பட்­ட­னர்.

சந்­தேக நபர்­க­ளைத் தேடும் பணி தொடர்­வ­தாக குவீன்ஸ்­லாந்து காவல்­து­றை­யி­னர் நேற்று இரவு தெரி­வித்­த­னர். அடுத்த அறி­விப்பு வரும்­வரை குடி­யி­ருப்­பா­ளர்­களை வெளி­யில் வர­வேண்­டாம் என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

மாண்ட காவல்­து­றை­யி­ன­ரில் ஒரு­வர் ஆண். மற்­ற­வர் பெண்.

மேலும் ஓர் அதி­கா­ரிக்கு இலே­சான காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் நான்­கா­ம­வர் தப்­பிச் சென்­ற­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பிரிஸ்­பனி­லி­ருந்து 270 கிலோ­மீட்­டர் தொலை­விலுள்ள வியம்பிலா எனும் ஒதுக்குபுற இடத்தில் அச்சம்பவம் நடந்தது. அங்குள்ள வீட்டில்­ ஒரு­வ­ரைக் காண­வில்லை என்று காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தக­வல் கிடைத்­தது.

அங்கு சென்ற அதி­கா­ரி­களைக் கொலை­யா­ளி­கள் திட்­ட­மிட்டு திடீ­ரென்று தாக்­கிக் கொன்­ற­தா­கக் கூறப்­பட்­டது. ஆஸ்திரேலிய காவல்துறையில் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் உயிரிழப்பு இதுவாகும்.