தைப்பே: சீனா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அணுவாயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய போர் விமானங்களை தைவான் ஆகாயவெளிக்குள் அனுப்பியுள்ளது.
இருதரப்புக்கும் இடையிலான உறவு மோசமாகி வருவதன் மேலும் ஓர் அறிகுறி அதுவாகும்.
24 மணிநேரத்தில் மொத்தம் 21 போர்விமானங்கள் தைவானின் தென்மேற்கில் உள்ள தற்காப்பு ஆகாயவெளிக்குள் அனுப்பப்பட்டதாக தைப்பே நேற்று தெரிவித்தது.
அவற்றில் 18, அணுவாயுதங்களை ஏந்தியபடி நீண்டதூரம் செல்லக்கூடிய எச்-6 ரக போர்விமானங்கள் ஆகும்.
சீனா மேற்கொள்ளும் அத்தகைய ஊடுருவல் நடவடிக்கைகளை தைவான் சென்ற 2020ஆம் ஆண்டு வெளியிட தொடங்கியதிலிருந்து ஆக அதிக எண்ணிக்கையில் எச்-6 போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி கூறியது.
தைவான் ஏற்றுமதி செய்யும் உணவு பானங்கள், மதுபானங்கள், மீன் சார்ந்த உற்பத்திகள் போன்றவற்றுக்கு சீனா கடந்த வாரம் தடைகளை விதித்தது.
அதன்வழி சீனா அனைத்துலக வர்த்தக விதிமுறைகளை மீறியுள்ளதாக தைவான் பிரதமர் சூ செங்-சாங் குற்றஞ்சாட்டினார்.

