காபூல் ஹோட்டலில் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் கிளை பொறுப்பு

காபூல் ஹோட்டலில் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் கிளை பொறுப்பு

2 mins read
87aab2ee-e406-464a-8e5e-a34bbbd7215b
-

காபூல்: சீன அர­ச­தந்­தி­ரி­களும் வணி­கர்­களும் அதி­கம் தங்­கிக் கூடும் காபூல் ஹோட்­ட­லில் வெடி­குண்­டுத் தாக்­கு­த­லுக்கு ஐஎஸ்­ஐ­எஸ் கிளை அமைப்பு பொறுப்­பேற்­றுக் கொண்­டுள்­ளது. கடந்த ஆண்டு தாலி­பான் ஆட்­சி­யைப் பிடித்­த­தற்­குப் பிறகு, சீனக் குடி­மக்­கள்­மீது நடத்­தப்­பட்­டுள்ள முதல் தாக்­கு­தல் இது.

ஆப்­கா­னிஸ்­தா­னில் தலி­பான் படை­யி­னர் கடந்த ஆண்டு ஆட்­சி­யைப் பிடித்த பிறகு, அவர்­க­ளு­டன் நல்­லு­றவு கொண்­டி­ருக்­கும் ஒரு சில நாடு­களில் சீனா­வும் ஒன்று.

மத்­திய கிழக்­கில் இயங்­கும் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பின் உள்­ளூர் கிளை­யான இஸ்­லா­மிக் ஸ்டேட்-கொர­சான் நேற்­றைய தாக்­கு­த­லுக்கு பொறுப்பு ஏற்­ப­தா­கக் கூறி­யது.

ஆப்­கான் தலை­ந­க­ரின் வசதி­யான பகு­தி­யில் உள்ள காபூல் லோங்­கான் ஹோட்­ட­லுக்­குள் அக்­கு­ழு­வி­னர் வெடி­குண்­டு­களை வெடிக்­கச் செய்­த­னர். அந்­தத் தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் குறைந்­தது 30 பேர் மாண்­ட­னர் அல்­லது காய­ம­டைந்­த­னர் என்று அமைப்பு கூறி­யுள்­ளது.

ஆனால் தலி­பான் அர­சாங்­கத்­தின் பேச்­சா­ளர் ஸாபி­புல்லா முஜா­ஹித், தப்­பிக்­கும் பொருட்டு ஹோட்­டல் அறை பால்­க­னி­யி­லி­ருந்து கீழே குதித்த வெளி­நாட்­ட­வர் இரு­வர் காய­ம­டைந்­த­தா­கக் கூறி­னார். மேலும் அர­சாங்­கப் படை­யி­ன­ரு­டன் நடந்த துப்­பாக்­கிச் சண்­டை­யில், தாக்­கு­தலை நடத்­திய கும்­ப­லைச் சேர்ந்த மூவர் மாண்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

அந்­தத் தாக்­கு­த­லால் சீனா மிக­வும் அதிர்ச்சி அடைந்­துள்­ள­தாக பெய்­ஜிங்­கில் பேசிய சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் வாங் வென்­பின் நேற்று தெரி­வித்­தார். அச் சம்­ப­வம் பற்றி சீன அர­ச­தந்­தி­ரி­கள் ஆப்­கா­னிஸ்­தா­னி­டம் புகார் அளித்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

இஸ்­லா­மிக் ஸ்டேட்-கொர­சான் தலி­பான் ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் நட்பு கொண்­டுள்ள நாடு­க­ளு­டன் தொடர்­பு­டைய இலக்­கு­க­ளின்­மீது கடந்த சில மாதங்­களில் நடத்­தி­யுள்ள மூன்­றா­வது தாக்­கு­தல் இது­வா­கும். செப்டம்பரில் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே நடந்த தாக்குதலுக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றது. அதில் பலர் உயிர் இழந்தனர்.