குவீன்ஸ்லாந்து தாக்குதல்: சதித் திட்டம் தீட்டப்பட்டது

குவீன்ஸ்லாந்து தாக்குதல்: சதித் திட்டம் தீட்டப்பட்டது

1 mins read
7b5c3f4b-f5b8-4905-8c86-33f073304187
-

பிரிஸ்­பேன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவின்ஸ்­லாந்து மாநி­லத்­தில் நடந்த தாக்­கு­த­லில் மாண்­ட­வர்­க­ளுக்கு அப்­ப­குதி மக்­கள் அஞ்­சலி செலுத்­தி­யுள்­ள­னர். நேற்று முன்­தி­னம் நடந்த அச்சம்­ப­வத்­தில் மொத்­தம் ஆறு பேர் மாண்­ட­னர். இரண்டு இளம் காவல்­துறை அதி­கா­ரி­களும் கொலை­யா­ளி­க­ளின் அண்­டை­வீட்­டுக்­கா­ரர் ஒரு­வ­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

வியம்­பிலா எனும் ஒதுக்­கு­புற இடத்­தில் உள்ள வீட்­டில் கேரத் டிரேன்ஸ் என்­ப­வ­ரைக் காண­வில்லை என்ற புகாரை விசா­ரிக்­கக் காவல்­து­றை­யி­னர் சென்­றி­ருந்­த­னர். ஆனால் முன்­னாள் பள்ளி தலைமை ஆசி­ரி­ய­ரான டிரேன்ஸ், அவ­ரது மனைவி மற்­றும் சகோ­த­ரர் மூவ­ரும் திட்­ட­மிட்டு, அங்­குச் சென்ற அதி­கா­ரி­களை சுட்­டுக் கொன்­ற­னர். மேலும் இரு காவல்­துறை அதி­கா­ரி­கள் காயங்­க­ளு­டன் தப்­பி­னர். பல மணி நேரம் நீடித்த நட­வ­டிக்­கைக்­குப் பின்­னர் கொலை­யா­ளி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர்.

தீவி­ர­வா­தப் போக்­கு­டை­ய­ டிரேன்ஸ், ஆஸ்­தி­ரே­லிய காவல்­துறை தம்­மைப் போன்­ற­வர்­க­ளைக் குறி­வைப்­ப­தா­க­வும் வேவு பார்ப்­ப­தா­க­வும் கரு­தி­னார்.