அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசு - சம்பளத்துடன் விடுப்பு!

1 mins read
3fb6ab24-3003-4796-9634-597060716e3c
படம்: அன்ஸ்பிளாஷ் -

கிறிஸ்மஸ் விருந்து அதிர்ஷடக் குலுக்கலில் தொலைக்காட்சி, ஹோட்டல் அறையில் இரண்டு நாள் விடுமுறை, மைக்ரோவேவ் அடுப்பு போன்ற பரிசுகள் வழக்கமாக கிடைக்கும். பிலிப்பீன்சின் ஒப்பனைப் பொருள் நிறுவனமான கலரெட் காஸ்மெட்டிக்ஸ் (Colorette Cosmetics) ஐந்து நாள் ஊதியத்துடன் கூடிய கூடுதல் விடுப்பை அதிர்ஷ்ட குலுக்கல் பரிசாக வழங்கியுள்ளது.

எப்போதும் அலுவலகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு பெரிய தொலைக்காட்சி பரிசாகக் கிடைத்து என்ன பபயன் என்று பிலிப்பீன்ஸ் வழக்கறிஞர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டார். அதுவே இந்தப் பரிசுக்கு காரணம் என்று கலரெட் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருவாட்டி நினா காபெரேரா டிக்டாக் காணொளியில் கூறியுள்ளார்.

விடுப்பு குறைவாக உள்ள பிலிப்பீன்சில் இந்த பரிசு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

8,000க்கும் அதிகமானோர் இந்தக் காணொளிக்கு லைக் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பீன்சில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்த ஊழியருக்கு ஐந்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு உரிமை உண்டு.

தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று Gallup கருத்துக்கணிப்பு காட்டுகிறது.