எலோன் மஸ்க் உலகின் மிகப் பெரும் பணக்காரர் இல்லை. அவரை விஞ்சிவிட்டார் ஒருவர்.

எலோன் மஸ்க் உலகின் மிகப் பெரும் பணக்காரர் இல்லை. அவரை விஞ்சிவிட்டார் ஒருவர்.

1 mins read
21ea40f0-b440-4d69-bbcf-63c8d64a15ba
எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பெர்னார்ட் அர்னால்ட். படம்: ஏஎஃப்பி -

ஆடம்பரப் பொருள்கள் நிறுவனமான எல்விஎம்எச் (LVMH)- இன் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பிரான்சின் திரு பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியலில் டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க்கை அவர் விஞ்சிவிட்டார். இதற்கு முன்னர் பிரான்ஸ் - அல்லது ஒட்டுமொத்த ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய உலகப் பெரும் பணக்காரர்களாக இருந்ததில்லை. 73 வயதான திரு அர்னால்ட், செல்வந்தவர் தரவரிசையில் நீண்ட காலமாக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், திரு மஸ்க்கைப் போலவும் பிற பெரும் செல்வந்தர்களைப் போலவும் இல்லாமல், பொதுவெளியில் மிக அரிதாகவே அவர் காணப்படுகிறார். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் செயல்படுவதும் இல்லை. இவர் டுவீட் செய்வதில்லையாம். 170.8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$230 பில்லியன்) சொத்து மதிப்பைக் கொண்டுள்ள திரு அர்னால்ட், ஐரோப்பிய கைத்திறனைப் பயன்படுத்தி எல்விஎம்எச்சை உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருள்கள் குழுமமாக மாற்றியுள்ளார். கிறிஸ்டியன் டியோர், ஃபெண்டி, ஜிவஞ்சி, மார்க் ஜேக்கப்ஸ், புல்கெரி, டேக் ஹோயர், செஃபோரா போன்ற 75 வெவ்வேறு ஆடம்பரப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள் நிறுவனங்கள் எல்விஎம்எச் குழுமத்தில் இடம்பெற்றுள்ளன.