'முகக்கவசம் அணியும் காலம் வந்துவிட்டது'

'முகக்கவசம் அணியும் காலம் வந்துவிட்டது'

2 mins read
80ff4e64-e2f3-4b56-82f1-bad8300d4c8c
-

அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்­டன்: முகக்­க­வ­சம் அணிய வேண்­டிய காலம் திரும்­பி­விட்­டது. இம்­முறை கொவிட்-19 தொற்­றுக்­கி­ருமி மட்­டு­மல்­லா­மல், கொரோனா கிருமி, சளிக்­காய்ச்­சல், ஆர்­எஸ்வி என்று குறிப்­பி­டப்­படும் சுவாச தொற்­றுப் பிரச்­சினை ஆகிய மூன்­றும் நியூ­யார்க் நக­ரம், லாஸ் ஏஞ்­ச­லஸ் உட்­பட அமெ­ரிக்கா முழுவதும் பரவு­ கிறது என்று அமெ­ரிக்க நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இத­னால் உட்­பு­றம் மற்­றும் வெளி­யி­டங்­களில் மக்­கள் முகக் கவ­சம் அணிய ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று அவர் கூறி­னர்.

நாடு முழு­வ­தும் கொவிட்-19 தொடர்­பான சம்­ப­வங்­கள் 56 விழுக் காடும் மருத்­து­வ­மனை நோயா­ளி­கள் சேர்ப்பு எண்­ணிக்கை 24% கூடி­யது.

கடந்த இரண்டு வாரங்­களில் மட்­டும் 13 மில்­லி­யன் பேர் நோய்­வாய்ப்­பட்­டுள்­ள­னர். தற்­போ­தைய சளிக்­காய்ச்­சல் கால­கட்­டத்­தில் 7,300 பேர் இறந்­துள்­ள­னர் என்று சிடிசி எனும் நோய்க்­கட்­டுப்­பாடு, தடுப்பு நிலை­யங்­கள் மதிப்­பிட்­டுள்­ளன.

வரும் மாதங்­களில் இந்த எண்­ணிக்கை இன்­ன­மும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆர்­எஸ்வி பாதிப்பு குறைந்து இருந்தாலும் தொற்று விகி­தம் நாடு முழு­வ­தும் அதி­க­ரித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்று நில­வ­ரத்­தைக் கருத்­தில்­கொண்டு முகக் கவ­சம் அணிய வேண்­டும் என்று நக­ரத்­துக்கு நக­ரம் 'சிடிசி' அதி­கா­ர­பூர்­வ­மாக ஆலோ­சனை வழங்கி உள்­ளது.

கிரு­மிப் பாதிப்பு தொடர்­பாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட வர்­க­ளின் எண்­ணிக்கை, தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் விகி­தம் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் இந்த ஆலோ­சனை வழங்கப்பட்டுள்ளது.

"சிடிசியின் ஆலோசனைக்காகக் காத்திருக்க தேவையில்லை. முகக்ககவசம் அணிய வேண்டும்," என்று அண்மைய பேட்டியில் சிடிசியின் இயக்குநர் ரோசெல் வெலென்ஸ்கி தெரிவித்தார்.

கொவிட்-19, சளிக்காய்ச்சல், ஆர்எஸ்வி ஆகிய மூன்றும் நாட்டின் சில பகுதிகளில் தீவிரமாகவும் சில இடங்களில் மிதமாகவும் இருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் கிருமித் தொற்று பரவியிருக்கிறது என்று வான்டெர் பில்ட் பல்கலைக்கழக மருத்துவப்பள்ளியின் தடுப்பு மருந்து பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஷஃபிங்கர் கூறினார்.

கிருமித்தொற்று ஆபத்து அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பணி பெண்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் போன்றோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சியாட்டிலில் உள்ள யுடபிள்யூ மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய், ஒவ்வாமை பிரிவின் இணைப் பேராசிரியரான டாக்டர் ஹெலன் சூ, தொற்று மற்றும் மருத்துவமனை நோளாளி சேர்ப்பு விகிதம் கூடி இருப்பதால் அனைவரும் முகமூடி அணிய பரிந்துரைத்துள்ளார்.

"ஆர்எஸ்வி மற்றும் சளிக் காய்ச்சலால் மருத்துவமனை படுக் கைகள் நிரம்பிவழிகின்றன. இந்த நேரத்தில் தொற்றுக்கிருமி பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவதே சிறந்தவழி என்று அவர் கூறியுள்ளார்.