வியட்னாமுக்கு 15.5 பில்லியன் டாலர் உதவி

வியட்னாமுக்கு 15.5 பில்லியன் டாலர் உதவி

1 mins read
55cbb0a0-01a3-46ad-86fe-cd24e07c3b1d
-

ஹனோய்: 'ஜி7' தொழில்வள நாடுகள், வியட்னாமுக்கு 15.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (S$21 பில்லியன்) உதவி வழங்கப்படும் என்று இரண்டு மேற்கத்திய தகவல்களை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த ஒப்பந்தம், ஜி7 நாடுகளால் போடப்பட்ட மூன்றாவது ஒப்பந்தமாக இருக்கும். பருவநிலை மாற்றம் மற்றும் தூய்மையான எரிபொருளுக்கு மாற அதிக கரியமில வாயுவை வெளியிடும் நாடுகளுக்கு ஜி7 நாடுகள் உதவி வருகின்றன.

2021ல் தென்னாப் பிரிக்காவுடனும் நவம்பரில் இந்தோனீசியாவுடனும் இதே போன்ற ஒப்பந்தங்களை ஜி7 நாடுகள் செய்துள்ளன.

இந்த நிலையில் உலகில் நிலக்கரி பயன்பாட்டில் முதல் 20 இடங்களில் இடம்பெற்று உள்ள நாடுகளில் ஒன்றான வியட்னாமுக்கு ஜி7 உதவிக்கரம் நீட்டி உள்ளது.