ஆறு மாநிலங்களில் வெள்ளம்

ஆறு மாநிலங்களில் வெள்ளம்

1 mins read
e43bd6a7-c27e-49cb-b98f-f31a8818800f
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் ஜோகூர், பாஹாங், திரங்­கானு, பினாங்கு, பேராக், நெகிரி செம்­பி­லான் ஆகிய ஆறு மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யம் இருப்­ப­தாக அந்­நாட்­டின் நீர்ப்­பா­சன, வடி­கால் துறை எச்­ச­ரித்­துள்­ளது.

பாஹாங், சர­வாக், ஜோகூர், திரங்­கானு ஆகிய நான்கு மாநி­லங்­களில் உள்ள சில ஆறு­க­ளின் நீர்­மட்­டம் எச் சரிக்கை அள­வைத் தாண்­டி­யுள்­ளது. தீப­கற்ப மலே­சி­யா­வில் உள்ள பெரும்­பா­லான அணை­கள் அதி­க­பட்ச அளவை எட்­டி­யி­ருக்­கின்­றன என்று தேசிய நீர் சேவை ஆணை­யத்­தின் தக­வல் தொடர்பு, பய­னீட்­டா­ளர் விவ­கார இயக்­கு­நர் முக­மது ஃபாசில் இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் நிலைமை கட்­டுக்­குள் இருப்­ப­தா­கக் கூறிய அவர், நேற்று பிற்­ ப­கல் ஒரு மணி நில­வ­ரப்­படி வெள்­ளம் அபாய இடங்­களில் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­களை மூடும் யோசனை இல்லை என்­றார்.

"மொத்­தம் 57 அணை­கள் உள்­ளன. இவற்­றில் மூல நீர் ஆதா­ரங்­கள் தொடர்­பான 47 பெரிய அணை­கள் தீப­கற்ப மலே­சி­யா­வில் உள்­ளன.

பெரும்­பா­லான அணை­கள் அதி­க­பட்ச நீர்­மட்­டத்தை எட்டி யுள்­ளன," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 17ஆம் தேதி­யி­லி­ருந்து தீப­கற்ப மலே­சி­யா­வின் கிழக்கு கட­லோர மாநி­லங்­களில் பரு­வ­மழை தொடர்ந்து பெய்­யும் என்று நேற்று முன்­தி­னம் தக­வல் வெளி­யா­னது. இதனை சமா­ளிக்­கும் வகை­யில் புதிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன.