கியவ் நகரத்தைத் தாக்கிய ரஷ்யா

கியவ் நகரத்தைத் தாக்கிய ரஷ்யா

1 mins read
2d03e29b-7670-43fd-ad98-172763d21acc
-

கியவ்: ரஷ்யா, ஈரா­னில் தயா­ரிக்­கப்­பட்ட வானூர்­தி­க­ளைக் கொண்டு கியவ் நக­ரத்­தைத் தாக்­கி­ய­தாக உக்­ரேன் கண்­ணீர் வடித்­துள்­ளது.

ஆனால் பேரி­ழப்­பு­கள் ஏற்படா­மல் வான் தற்­காப்பு சாத­னங்­கள் தடுத்­து­விட்­ட­தாக அந்­ந­க­ரத்­தின் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மத்­திய ஷெவ்­சென்­கிவ்ஸ்கி மாவட்­டத்­தில் வெடிப்­பு­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் இரண்டு நிர்­வா­கக் கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­த­தா­க­வும் உயிர்ச்­சே­தம் இல்லை என்­றும் கியவ் நகர மேயர் விடாலி கிளிட்கோ கூறி­னார். மூன்று மணி நேரத்­திற்­குப் பிறகு நிலைமை சீர­டைந்­தது என்­றார் அவர்.

"அதி­கா­லை­யி­லி­ருந்து எதிரி வானூர்­தி­கள் இந்த வட்­டா­ரத்­தைத் தாக்­கின. பயங்­க­ர­வாத நாடு மீண்­டும் இவ்­வட்­டா­ரத்­தின் முக்­கிய உள்­கட்­ட­மைப்பு வசதிகளையும் தலை­ந­க­ரை­யும் குறி­வைத்­துத் தாக்­கி­யது," என்று கியவ் ஆளு­நர் குறிப்­பிட்­டார்.

உக்­ரே­னிய விமா­னப் படை­யின் பேச்­சா­ளர் யூரி இஹ்­னாட், வானூர்­தி­களை சுட்டு வீழ்த்­து­வது சிர­மம் என்­ப­தால் இருட்­டாக இருக்­கும்­போது வேண்­டு­மென்றே தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது என்­றார்.

"வான் பாது­காப்பு முறை சிறப்­பாக வேலை செய்­தது. 13 வானூர்திகளும் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன," என்று அவர் சொன்­னார். இதற்­கி­டையே அனைத்து வானூர்­தி­களும் சுட்டு வீழ்த்­தப்­பட்­டதை உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி பாராட்டி­ யி­ருக்­கி­றார்.