கோலாலம்பூர்: மலேசியாவின் ஒரே ஆகப்பெரிய எதிர்க்கட்சியான பெரி காத்தான் நேஷனலின் தலைவர் முகை தீன் யாசினை ஓரங்கட்டும் விதமாக புதிய தலைவர்களை முன்னிறுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் முகைதீன் யாசின் தலைமையில் அக்கூட்டணி போட்டியிட்டு அன்வர் இப்ராஹிமின் கூட்டணிக்கு அடுத்ததாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் கூடும்போது அதன் பொதுச் செயலாளர் ஹம்சா ஸைனுதீன் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை வகிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டு மல்லாமல் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுதின் ஹாசன், பெரிக் காத்தான் நேஷனலின் 74 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொறடாவாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரதமர் அன்வார் இப்ராஹிம், வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
அனைத்தும் நல்லவிதமாக நடக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

