பாரிஸ்: பிரான்சில் லியோன் நகரம் அருகே உள்ள ஒரு குடியிருப்புக் கட்டடத்தில் நேற்றுக் காலை தீ மூண்டதில் பத்து பேர் மாண்டுவிட்டனர்.
அவர்களில் 3 முதல் 15 வயது வரையிலான ஐந்து பிள்ளைகளும் சிறார்களும் அடங்குவர் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
இதர நால்வருக்குக் கடுமையான தீப்புண் ஏற்பட்டது. தீ தரைத் தளத்தில் மூண்டது. பிறகு சரசரவென அந்த ஏழு மாடிக் கட்டடம் எங்கும் தீ பரவிவிட்டது.
தீ, உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 3 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி) மூண்டது. அப்போது பெரும்பாலானோர் தூங்கிக்கொண்டு இருந்ததாக மீட்புப் படை கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

