தோக்கியோ: ஜப்பான் தன் ராணுவத்தைப் பலப்படுத்த US$320 பில்லியன் (S$438.18 பில்லியன்) திட்டத்தை தொடங்கப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி சீனாவைத் தாக்கும் அளவிற்கு ஏவுகணை ஆற்றலைப் பலப்படுத்த ஜப்பான் விரும்புகிறது.
வட்டார அளவில் நிலவும் தொடர் பதற்றங்களைச் சமாளிக்கத் தோதாக தன்னை தயார்ப் படுத்திக்கொள்ளவும் அது இந்த முயற்சியில் இறங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

