ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகளுடன் அதிபர் புட்டின் தீவிர ஆலோசனை

ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகளுடன் அதிபர் புட்டின் தீவிர ஆலோசனை

2 mins read
c6dceda3-ecb2-488c-8b46-476bed69494d
-

மாஸ்கோ: உக்­ரே­னுக்கு எதி­ரான போர் தொடர்­பாக தமது ராணுவ உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் தீவிர ஆலோசனையில் ஈடு­பட்­ட­தாக ரஷ்ய அர­சாங்­கம் நேற்று தெரி­வித்­தது. உக்­ரே­னுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை ரஷ்யா முடுக்­கி­விட்­டுள்ள நிலை­யில் இந்த ஆலோசனை நடை­பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உக்­ரே­னில் சிறப்பு ராணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் ராணு­வப் பிரி­வின் தலை­மை­யு­டன் அதி­பர் புட்­டினே ஒரு­நாள் முழு­வ­தும் கலந்­து­ரை­யா­டி­ய­தாக ரஷ்ய அர­சாங்­கம் அறிக்கை வெளி­யிட்­டது.

ரஷ்­யத் தற்­காப்பு அமைச்­சர் செர்கே ஷொயி­கு­வு­ட­னும் ராணு­வத் தள­பதி வெலரி கெர­சி­மோ­வு­ட­னும் அதி­பர் புட்­டின் கலந்­து­ரை­யா­டி­னார். பிறகு ரஷ்ய ராணு­வத்­தின் வெவ்­வேறு பிரி­வு­க­ளின் தலை­வர்­களை தனித்­த­னி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னார்.

உக்­ரேன் போரில் குறு­கியகால, நடுத்­தரகால இலக்­கு­கள் குறித்து பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மாறு அதி­பர் புட்­டின் ராணுவ உயர் அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டதை ரஷ்­யத் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­பி­யது. இதற்­கி­டையே, உக்­ரே­னின் பல நக­ரங்­களை நோக்கி அஷ்யா நேற்று முன்­தி­னம் ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­யது. இத­னால் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்டு பல உக்­ரே­னிய நக­ரங்­கள் இரு­ளில் வாடின. பனிக்­கா­லம் என்­ப­தால் கடுங்­கு­ளி­ரில் உக்­ரே­னிய மக்­கள் அவ­தி­யற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உக்­ரே­னைக் குறு­கிய காலத்­தி­லேயே கைப்­பற்­றி­வி­ட­லாம் என்ற எண்­ணத்­து­டன் போரைத் தொடங்­கிய ரஷ்­யா­வுக்கு பல பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்­டதை அடுத்து, கடந்த அக்­டோ­பர் மாதத்­தி­லி­ருந்து தனது வியூ­கத்தை அது மாற்றி உள்­ளது.

நில­வ­ழித் தாக்­கு­தல்­க­ளைக் குறைத்­துக்­கொண்டு ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் அது கவ­னம் செலுத்தி வரு­கிறது. குறிப்­பாக, உக்­ரே­னிய ராணு­வத் தளங்­களை ரஷ்யா தகர்த்து வரு­கிறது.

ஏற்­கெ­னவே கடும் குளி­ரால் துன்­பு­றும் உக்­ரே­னி­யர்­க­ளுக்கு எதி­ரா­கத் தொடுக்­கப்­படும் தாக்­கு­தல்­கள் போர் குற்­றங்­க­ளுக்­குச் சம­மா­னவை என்று பிரான்­சும் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் குற்றம் சாட்டி உள்ளன. ரஷ்­யா­வின் தாக்­கு­தல்­கள் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னவை என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் வெளி­நாட்­டுக் கொள்­கைப் பிரி­வுத் தலை­வர் சாடி­யுள்­ளார்.