16,000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் ஆட்குறைப்பு

16,000க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள் ஆட்குறைப்பு

1 mins read
57c9fd83-e53a-4c2b-979a-a47d0dca18c9
-

கொழும்பு: பொரு­ளி­யல் நெருக்­க­டி ­நி­லை­யால் நிலை­கு­லைந்­துள்ள இலங்கை, அனைத்­து­லக பண நிதி­யத்­து­ட­னான ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு முன்பு செல­வு­க­ளைக் குறைக்­கும் நோக்­கில் 16,000க்கும் மேற்­பட்ட ராணுவ வீரர்­களை ஆட்­கு­றைப்பு செய்ய முடிவு எடுத்­துள்­ளது.

இலங்கை அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க முன்­வைத்­துள்ள பரிந்­து­ரை­யின்­படி ராணுவ வீரர்­கள் அவர்­க­ளா­கவே பணி­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­றும் முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

இதன்­மூ­லம் ராணு­வத்­துக்­காக செல­வ­ழிக்­கப்­படும் தொகை­யைக் குறைக்க இலங்கை அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

பணி­யாற்­றா­மல் வெளி­நா­டு­களில் இருக்­கும் ராணு­வம், ஆகா­யப் படை, கடற்­படை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளுக்­கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என்று இலங்­கைத் தற்­காப்பு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அவர்­கள் தங்­கள் ராணு­வப் பிரி­வுக்­குத் திரும்­பா­ம­லேயே பணி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை 16,141 ராணுவ வீரர்­கள் பொது மன்­னிப்பு கேட்டு விண்­ணப்­பம் செய்­தி­ருப்­ப­தாக இலங்கை ராணு­வம் தெரி­வித்­தது.

அவர்­களில் ராணுவ அதி­கா­ரி­களும் மற்ற பத­வி­களை வகிப்­ப­வர்­களும் அடங்­கு­வர்.

"கிட்­டத்­தட்ட 21 ராணுவ அதி­கா­ரி­களும் 15,838 ராணுவ வீரர்­களும் மருத்­து­வச் சான்­றி­தழ்­க­ளைச் சமர்ப்­பித்­து­விட்­ட­னர். அவர்­கள் கூடிய விரை­வில் பதவி வில­கல் கடி­தங்­க­ளை­யும் கொடுத்­து­வி­டு­வர்," என்று ராணுவம் கூறி­யது.