மகாதீரின் பதவி விலகல் ஏற்கப்பட்டது; போராட்டம் தொடரும் என முக்ரிஸ் சூளுரை

மகாதீரின் பதவி விலகல் ஏற்கப்பட்டது; போராட்டம் தொடரும் என முக்ரிஸ் சூளுரை

1 mins read
ee026cef-5248-45f4-ab26-2823a3756817
-

பெட்­டா­லிங் ஜெயா: பெஜு­வான் கட்­சி­யின் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்து டாக்­டர் மகா­தீர் முகம்­மது வில­கி­யுள்­ளார். அவ­ரது பதவி வில­கல் கடி­தத்தை பெஜு­வான் கட்சி ஏற்­றுக்­கொண்­ட­தாக அக்­கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரும் டாக்­டர் மகா­தீ­ரின் மக­னு­மான முக்­ரிஸ் மகா­தீர் நேற்று தெரி­வித்­தார்.

"அவ­ரது சேவைக்­கும், வழி­காட்­டு­த­லுக்­கும், அறி­வுத்­தி­ற­னுக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றோம். அவர் எங்­க­ளுக்கு ஆற்றிய சேவை

களுக்கு இறை­வ­னால் மட்­டுமே தகுந்த வெகு­ம­தியை அவ­ருக்­குத் தர முடி­யும்," என்­றார் முக்­ரிஸ்.

சம­யம், இனம், நாடு ஆகி­ய­வற்­றுக்­காக டாக்­டர் மகா­தீர் தொடங்­கிய போராட்­டத்தை பெஜு­வான் கட்சி தொட­ரும் என்று அவர் உறுதி அளித்­தார்.

டாக்டர் மகாதீரின் கொள்கைகள், தலைமைத்துவ முறை ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்க்க பெஜுவான் கட்சி பாடுபடும் என்று முக்ரிஸ் கூறினார்.

தலைவர் கட்சியிலிருந்து டாக்டர் மகாதீர் விலகியுள்ளபோதிலும் பெஜுவான் கட்சியின் உறுப்பினராக அவர் தொடர்கிறார் என முக்ரிஸ் தெரிவித்தார்.