அமெரிக்காவில் மோசமான சளிக்காய்ச்சல் பாதிப்பு

அமெரிக்காவில் மோசமான சளிக்காய்ச்சல் பாதிப்பு

1 mins read
9836a2b1-eb32-41c3-a4ea-08be5c2ce938
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வில் மிக மோச­மான சளிக்­காய்ச்­சல் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அங்­குள்ள பலர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்­கச் சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

சளிக்­காய்ச்­சல் போன்ற நோய்­க­ளால் அமெ­ரிக்­கா­வில் இது­வரை ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பாதிப்­பும் ஒன்று. ஏதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­பா­கவே நோய் பர­வல் தொடங்­கி­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சுவா­சப் பிரச்­சி­னையை விளை­விக்­கும் கிரு­மி­யால் சிறு­வர்­கள் பலர் நோய்­வாய்ப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் மருத்­து­வ­ம­னை­களில் அனு­

ம­திக்­கப்­பட்­டி­ருக்­கும் சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை புதிய உச்­சத்தை எட்­டி­யி­ருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இன்­ஃபு­ளு­வென்சா எனப்­படும் சளிக்­காய்ச்­ச­லால் ஏற்­படும் பாதிப்பு பொது­வாக அமெ­ரிக்­கா­வில் பிப்­ர­வரி மாதத்­தில் உச்­சத்தை எட்­டும். ஆனால் கடந்த பத்­தாண்­டு­க­ளுக்கு மேல் இல்­லாத அள­வில் அந்­நோய் கார­ண­மாக அமெ­ரிக்­கா­வில் பலர் தற்­போது மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யை­யும் இது மிஞ்­சி­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று அமெ­ரிக்­கா­வில் குறைந்­துள்­ள­போ­தி­லும் அது படிப்­ப­டி­யாக மீண்­டும் அதி­க­ரித்து வரு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ளது.

இந்­நி­லை­யில், ஏற்­கெ­னவே நிலை­கு­லைந்­தி­ருக்­கும் அமெ­ரிக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­ட­மைப்­புக்கு கொவிட்-19, சளிக்­காய்ச்­சல், சுவாச நோய் ஆகி­யவை ஒரு­சேர நெருக்­கு­தல் அளிக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது.