வெள்ளத்தால் மலேசியாவில் மிகக் கடுமையான பாதிப்பு

வெள்ளத்தால் மலேசியாவில் மிகக் கடுமையான பாதிப்பு

2 mins read
54c9608c-175d-4266-9ea9-ac84b113f190
-

கோலா­லம்­பூர்: வெள்­ளம் கார­ண­மாக மலே­சி­யா­வில் மிகக் கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஐந்து மாநி­லங்­களில் 20,000க்கும் மேற்­பட்­டோர் தங்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறி துயர்­து­டைப்பு முகாம்­களில் தஞ்­சம் அடைந்­துள்­ள­னர்.

கிளந்­தான், திரங்­கானு ஆகிய மாநி­லங்­களில் நிலைமை மோச­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கிளந்­தா­னின் தும்­பாட் நக­ரில் வீடு ஒன்று வெள்­ள­நீ­ரில் மூழ்­கி­யது. அதை­ய­டுத்து, மின்­சா­ரம் தாக்கி வீட்­டில் இருந்த மூன்று சகோ­த­ரி­கள் சம்­பவ இடத்­தி­லேயே மாண்­ட­னர்.

மூவ­ரும் 20 வய­துக்கும் 27

வய­துக்­கும் இடைப்பட்­ட­வர்­கள்.

வீட்­டுக்கு வெளியே அவர்­க­ளது சட­லங்­கள் மிதந்­து­கொண்­டி­ருந்­ததை மீட்­புப் பணி­யா­ளர்­கள் கண்­ட­தாக மலே­சி­யா­வின் ஆஸ்ட்ரோ அவானி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

வெள்­ளம் வீட்­டுக்­குள் புகுந்­த­போது அந்த மூன்று சகோ­த­ரி­களில் ஒரு­வர் வீட்­டுக்கு முன்பு இருந்த கம்­பம் ஒன்­றைப் பிடித்­துக்­கொண்­ட­தா­க­வும் அப்­போது அவர் மீது மின்­சா­ரம் பாய்ந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. அவ­ருக்­குப் பக்­கத்­தில் நின்­று­கொண்­டி­ருந்த இரு­வ­ரை­யும் மின்­சா­ரம் பதம் பார்த்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சகோ­த­ரி­க­ளின் மர­ணம் குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, திரங்­கா­னு­வில் 11,415 பேரும் கிளந்­தா­னில் 8,645 பேரும் ஜோகூ­ரில் 75 பேரும், பேராக்­கில் 49 பேரும், பாகாங்­கில் 40 பேரும் துயர்­து­டைப்பு முகாம்­களில் தஞ்­சம் அடைந்­த­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. கிளந்தான் மாநிலத்தை திரங்கானுவுடன் இணைக்கும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அவ்வழியாகச் செல்ல வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஓர் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் திரங்கானுவிலிருந்து தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்ல பயன்படுத்தப்படும் ஈஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வரு கின்றன.