கோலாலம்பூர்: மலேசியாவின் பாத்தாங் காலி நகரில் இம்மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 24 பேர் மாண்டுவிட்டனர்.
மாண்ட 24 பேரும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே. மண்ணுக்கு அடியில் இன்னும் ஒன்பது பேர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்
படுகிறது.
மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தபோதிலும் அவர்களைத் தேடும் பணிகள் நேற்று தொடர்ந்தன.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் மோப்ப நாய்களின்
உதவியோடு தேடுதல் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றன.
இந்நிலையில், தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த எட்டு மோப்ப நாய்களைக் கொண்ட கே9 பிரிவுக்கு நேற்று ஓய்வு அளிக்கப்பட்டது. தமது தந்தையைக் காணவில்லை என்று கூறிக்கொண்ட ஆடவர் ஒருவர் தமது மூன்று குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று மீட்புப் படையினரின் முகாமுக்குச் சென்றதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

