சீன அரசு வெளியிடும் கொவிட்-19 மரண எண்ணிக்கை குறித்து சந்தேகம்

சீன அரசு வெளியிடும் கொவிட்-19 மரண எண்ணிக்கை குறித்து சந்தேகம்

2 mins read
632d0488-c166-47e5-8615-34d988c5796f
-

பெய்­ஜிங்: பல வாரங்­க­ளுக்­குப் பிறகு சீனா­வில் மீண்­டும் கொவிட்-19 தொடர்­பான மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இருப்­பி­னும், சீன அர­சாங்­கம் வெளி­யி­டும் அதி­கா­ர­பூர்வ மரண எண்­ணிக்கை குறித்து சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

சீனா­வில் அறவே கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்­லாத நிலையை இலக்­கா­கக் கொண்டு அந்நாடு பல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆனால் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக மக்­க­ளின் இயல்­பு­நிலை, அன்­றாட வாழ்க்கை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் பல இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.

இதை­ய­டுத்து, அண்­மை­யில் கட்­டுப்­பா­டு­க­ளைச் சீனா தளர்த்­தி­யது. அத­னைத் தொடர்ந்து, பல நக­ரங்­களில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்­தது.

இதற்­கி­டையே, கொவிட்-19 கார­ண­மாக இரு­வர் மாண்­டு­விட்­ட­தாக சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

இம்­மா­தம் 3ஆம் தேதிக்­குப் பிறகு இவை­தான் சீனா­வில் பதி­வாகி இருக்­கும் முதல் கொவிட்-19 மர­ணங்­கள் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஆனால் சீனா­வின் பல நக­ரங்­களில் ஏற்­பட்­டுள்ள பெரும் பாதிப்­பைக் காணும்­போது அதி­கா­ரி­கள் கூறும் மரண எண்­ணிக்கை மிக­வும் குறை­வாக இருப்­ப­தா­க­வும் நம்பக்கூடிய அள­வுக்கு இல்லை என்றும் குரல்­கள் எழுந்­துள்­ளன.

கொவிட்-19 கார­ண­மாக

உயி­ரி­ழந்­தோ­ரைத் தக­னம் செய்­வ­தற்­காக தலை­ந­கர் பெய்ஜிங்­கில்

­அ­மைக்­கப்­பட்­டுள்ள தக­னச்­சா­லை­யில் பல பிணப்­பெட்­டி­க­ளைக் கண்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தைச் சேர்ந்த செய்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

அங்கு முழுப் பாது­காப்பு ஆடை அணிந்த அதி­கா­ரி­கள் இருந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

ஆனால் மாண்­டோர் அனை­வ­ரும் கொவிட்-19 கார­ண­மாக இறந்­தார்­களா என்­பது குறித்து அந்­தச் செய்­தி­யா­ளர்­க­ளால் உறுதி செய்ய முடி­ய­வில்லை.

இது­கு­றித்து ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யம் பதில் அளிக்­க­வில்லை.

கொவிட்-19 கார­ண­மாக இது­வரை சீனா­வில் வெறும் 5,237 பேர் மாண்­டு­விட்­ட­தாக அந்­நாடு வெளி­யிட்­டுள்ள அதி­கா­ர­பூர்­வப் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

இது உண்­மை­யாக இருந்­தால் 1.4 பில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட சீனா­வில் கொவிட்-19 மரண விகி­தம் மிக­வும் குறை­வா­ன­தாக இருக்­கும்.

ஆனால் ஆரம்­பத்­தில் மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­த­தால் சீன மக்­க­ளி­டையே கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான இயற்கை எதிர்ப்­புச் சக்தி போது­மான அள­வில் இல்லை என்று சுகா­தா­ரத்­துறை நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். மேலும், சீனா­வில் பல முதி­ய­வர்­கள் இன்­ன­மும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­ததை அவர்­கள் சுட்­டி­னர்.

அடுத்த சில மாதங்­களில் சீனா­வில் 1.5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் கொவிட்-19 கார­ண­மாக மர­ணம் அடை­யக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.