பேங்காக்: இதயப் பிரச்சினை காரணமாக மயங்கி விழுந்து மருத்து வமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்நாட்டின் இளவரசியார் பஜ்ரகிதியபா நரேந்திர டெபியாவதியின் உடல்நிலை சீராக இருப்பதாக தாய்லாந்து அரச குடும்பம் தெரிவித்துள்ளது. 44 வயது இளவரசியாரின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை இயங்க சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த புதன்கிழமை மாலை போட்டிக்காக தமது நாய்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தபோது இளவரசியார் மயங்கி விழுந்தார்். இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து அவருக்கு சுலாலங்கோர்ன் மெமோரியல் மருத்துவ
மனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.

