பயங்கரவாத எதிர்ப்பு முகாமைப் பிடித்த தலிபான்

பயங்கரவாத எதிர்ப்பு முகாமைப் பிடித்த தலிபான்

1 mins read
7948cbe9-d12a-426d-b3f6-9ed7cb4493e0
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னில் உள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்பு முகாம் மீது அந்­நாட்­டைச் சேர்ந்த தலி­பான் போரா­ளி­கள் தாக்­கு­தல் நடத்தி அதைத் தங்­கள் கட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர்.

முகா­மில் இருந்­தோ­ரைப் போரா­ளி­கள் பிணைக்­கை­தி­க­ளாக வைத்­துள்­ள­னர்.

அவர்­களை விடு­வி­க்­கும் முயற்சியில் பாகிஸ்­தான் அதி­கா­ரி­கள் தலி­பான் போரா­ளி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, கிட்­டத்­தட்ட 20 தலி­பான் போரா­ளி­க­ளின் பிடி­யில் இருக்­கும் முகா­மைப் பாது­காப்­புப் படை­யி­னர் சுற்­றி­வ­ளைத்­துள்­ள­னர். அவ்விடத்துக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆப்­கா­னிஸ்­தா­னுக்­குத் தப்­பிச் செல்ல பாது­காப்­பான வழி அமைத்­துத் தரு­மாறு தலி­பான் போரா­ளி­கள் கேட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தாக பாகிஸ்­தான் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

போராளிகள் தாக்கியதில் குறைந்தது ஒரு ராணுவ அதிகாரி மாண்டதாக நம்பப்படுகிறது.