வாஷிங்டன்: சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மளமளவென அதிகரித்து வரும் நிலையில், நிலைமை
கட்டுக்கடங்காமல் போகக்கூடும் என்று மற்ற நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சுகாதாரத்துறை நிபுணர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனாவில் பலர் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதை சுகாதாரத்துறை நிபுணர்கள் சுட்டினர். சீனாவில் அடுத்த ஆண்டு புதிய கொவிட்-19 அலை ஏற்படக்கூடும் என்றும் அது காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடையக்கூடும் என்றும் அஞ்சப்
படுகிறது.
இத்தகைய ஒரு சூழல் ஏற்பட்டால் அது உலகளாவிய பொருளியலை வெகுவாகப் பாதிக்கும் என சில அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் கவலை தெரிவித்
துள்ளனர்.
இருப்பினும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் எனத் தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.
சீனாவில் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால் அது விநியோகச்
சங்கலிகளைப் பாதிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சீனா இசைந்தால் அதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்தது.
பெருமளவிலான கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்கொள்ள சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை முன்கூட்டியே தயார்நிலையில் வைத்திருப்பது, துல்லியமான மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட தரவுகளைச் சேகரிப்பது, வெளிப்படையான தகவல் பரிமாற்றம் ஆகியவை மிகவும் முக்கியம் என்று கொவிட்-19 அலைகளால் முன்பு பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறினர்.
சீனாவின் ஒரு கட்சி அரசியல் முறைதான் கொவிட்-19
நெருக்கடிநிலையை எதிர்கொள்ள மிகச் சரியான உத்தி என்று நீண்டகாலமாகவே சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்து வந்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் தயாரித்த தடுப்பூசிகளைவிட சீனாவின் தடுப்பூசிகள் உயர்தரமானவை என்பது அவரது வாதம். ஆனால் அதிபர் ஸியின் இந்த கருத்து தவறானது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
"கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்கொள்ள மேற்கத்திய நாடு
களிடம் இருந்து உதவி கேட்பது அவமானத்துக்குரியது என்று சீனா கருதுகிறது. உதவி கேட்டால் சீனா கையாளும் அணுகுமுறைகள் குறித்து கேள்வி எழும் என்று சீன அரசாங்கம் அஞ்சுகிறது," என்று ஜனநாயகத் தற்காப்பு அறநிறு
வனத்தைச் சேர்ந்த திரு கிரேக் சிங்கள்டன் கூறினார்.
கொவிட்-19 அலையைத் தவிர்ப்பது குறித்து சீன அதிகாரிகளுடன் ஐரோப்பிய, அமெரிக்க அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் திரைக்குப் பின்னால் கலந்துரையாடு
வதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலைமை மோசமடைவதற்கு முன்பு சீனாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர். சரியான முடிவு எடுப்பது சீனாவின் கைகளில் இருப்பதை ஐரோப்பிய, அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய உருமாறிய கொவிட்-19 வகை கிருமிகள் தலைதூக்கக்கூடும் என்று அமெரிக்கா அக்கறை தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளைச் சீனா அண்மையில் தளர்த்தியது. அதனைத் தொடர்ந்து அங்கு
பலருக்கு அந்நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், கட்டுப்பாடுகளும் தளர்த்தப்
பட்டுள்ளதால் உருமாறிய கொவிட்-19 வகை கிருமிகள் உருவாகி உலகெங்கும் பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

