வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் தாதியர்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் தாதியர்

1 mins read
1559a489-80e2-48ef-a167-48f8f25241f4
-

லண்­டன்: சம்­பள உயர்வு கேட்டு பிரிட்­ட­னைச் சேர்ந்த தாதி­யர் நேற்று மீண்­டும் வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தாதி­யர் தொடர்ந்து வேலை­

நி­றுத்­தப் போராட்­டங்­களில் ஈடு­பட்­டால் அது நோயா­ளி­க­ளின் பாது­காப்பை வெகு­வா­கப் பாதிக்­கும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டும் தாதி­யர் வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் இறங்­கி­யுள்ளனர்.

இங்­கி­லாந்து, வேல்ஸ், வட­

அ­யர்­லாந்து ஆகிய நாடு­ளில் உள்ள ராயல் தாதி­மைக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 100,000 தாதி­யர்­ வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதற்கு முன்பு கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று அவர்­கள் வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். 106 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அதுவே அந்த தொழிற்­சங்­கம் நடத்­திய முதல் வேலை நிறுத்­தப் போராட்­டம் ஆகும்.

சம்பள உயர்வு வேண்டும் என்று தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் தாதியர்.

படம்: ராய்ட்டர்ஸ்