மலேசியாவில் மோசமடையும் வெள்ளம்: குழந்தை உட்பட ஐவர் மரணம்

மலேசியாவில் மோசமடையும் வெள்ளம்: குழந்தை உட்பட ஐவர் மரணம்

2 mins read
deaad235-495d-44bf-ab7e-4ce8f54d5848
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் சில பகு­தி­களில் மிக மோச­மான வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. எதிர்பார்க்கப்­பட்­ட­தை­விட மலே­சி­யா­வில் இவ்­வாண்டு வெள்­ளத்தால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பு அதிகம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாநி­லங்­களில் 66,000க்கும் மேற்பட்டோர் துயர்துடைப்பு முகாம் களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அது­மட்­டு­மல்­லாது, வெள்­ளம் கார­ண­மாக ஐந்து பேர் மாண்­டு­விட்­ட­தாக மலே­சிய அர­சாங்­கம் நேற்று தெரி­வித்­தது. மாண்­டோ­ரில் 15 மாதக் குழந்­தை­யும் அடங்­கும்.

மலே­சி­யா­வின் கிழக்­குக் கட­லோர மாநி­லங்க­ளான கிளந்­தா­னும் திரங்­கா­­னு­வும் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

துயர்­து­டைப்பு முகாம்­களில் இருப்­போ­ரில் 17,326 பேர் கிளந்­தா­னை­யும் 37,792 பேர் திரங்­கா­னு­வை­யும் சேர்ந்­த­வர்­கள்.

நிலைமை மேலும் மோச­

ம­டை­யக்­கூ­டும் என்று மலே­சிய அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

பாகாங், ஜோகூர், பேராக் ஆகிய மாநி­லங்­க­ளி­லும் வெள்­ளம் கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கா­னோர் வீடு­

க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

கிளந்­தா­னில் 1967ஆம்

ஆண்­டுக்­கு­ப் பிறகு இவ்­வாண்­டில் ஆக அதி­க­மான மழை பெய்­துள்­ளது. இம்­மா­தம் 18ஆம் தேதி­யன்று கிளந்­தா­னில் உள்ள சில கிரா­மங்­களில் இது­வரை இல்­லாத மழை பதி­வா­னது.

"கிளந்­தா­னில் இது­வரை இல்­லாத வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ள­தால். அங்கு அசா­தா­ர­ண­மான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஆறு­களில் நீர் மட்­டம் உயர்ந்து கரை­பு­ரண்­டோ­டி­யது.

"இத­னால் இதற்கு முன் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­ப­டாத இடங்­

க­ளி­லும் வெள்­ள­நீர் புகுந்­து­விட்­டது. அண்டை நாடான தாய்­லாந்­தி­லும் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ள­தால் நிலைமை இன்­னும் மோச­ம் அடையக்கூ­டும் என்று அஞ்­சப்­

ப­டு­கிறது," என்று கிளந்­தா­னின் வடி­கால், நீர்ப்­பா­ச­னத்­துறை

இயக்­கு­நர் கமால் முஸ்­தஃபா தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, வெள்­ளம் கார­ண­மாக மலே­சி­யா­வெங்­கும் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறி துயர்­து­டைப்பு முகாம்­களில் தஞ்­சம் அடை­வோர் எண்­ணிக்கை அதி­

க­ரித்து வரு­கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த சில நாள்களில் மேலும் உயரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

வட­கி­ழக்கு பரு­வ­ம­ழைக்­கா­லத்­தால் பெய்த கனமழையை அடுத்து, நாட்டில் உள்ள பல இடங்களில் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­ மலே­சி­யப் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் அர்­மி­ஸான் முகம்­மது அலி தெரி­வித்­தார்.

469 துயர்­து­டைப்பு முகாம்­கள் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

துயர்­து­டைப்பு முகாம்­களில் இருப்­ப­வர்­க­ளுக்கு நிவா­ர­ண­ப் பொருள்­களை வழங்க தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி மூலம் எஃப்ஜிவி ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் 5 மில்­லி­யன் ரிங்­கிட் நன்­கொடை வழங்­கி­யதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேரி­டர் நிர்­வா­கத்­துக்­கும் மீட்­புப் பணி­க­ளுக்­கா­க­வும் கூடு­தல் நிதி ஒதுக்­கப்­படும் என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் அறி­வித்­துள்­ளார்.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணியில் மலேசிய மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.