பாத்தாங் காலி நிலச்சரிவு: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

பாத்தாங் காலி நிலச்சரிவு: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
5f09498a-d838-41a9-a08d-b456cd13f5af
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் கெண்­டிங்­ பகுதியில் உள்ள பாத்­தாங் காலி எனும் இடத்தில் சென்ற வாரம் நேர்ந்த நிலச்­ச­ரி­வில் ஆகக் கடைசி நில­வ­ரப்­படி மாண்­டோ­ரின் எண்­ணிக்கை 26க்கு அதி­க­ரித்­தது. தனது நாயை இறுக்­க­மாக அணைத்­த­படி மாண்­டு­கி­டந்த ஓர் ஆட­வ­ரின் உடலை மீட்­புப் பணி­யாளர்­கள் நேற்று மீட்­டெ­டுத்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சென்ற வாரம் வெள்­ளிக்­கி­ழமை­யன்று உரி­ம­மின்றி அமைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு முகாம் இருந்த இடத்­தில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. நேற்­றிரவு நில­வ­ரப்­படி இன்­னும் ஏழு பேரைக் காண­வில்லை.

இச்சம்­ப­வத்­தைத் தொடர்ந்து முகாம்­களை நடத்­தும் நிறு­வ­னங்­கள் வரு­வாயை இழக்க நேரிட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அத்தகைய நிறுவனங்களின் முகாம்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு செய்­யப்­பட்ட விண்­ணப்­பங்­க­ளைப் பலர் மீட்டுக்கொள்கின்றனர். சில நிறுவனங்கள் இது­வரை மட்­டுமே சுமார் 6,000 ரிங்­கிட் (1,825 வெள்ளி) தொகையை இழந்­துள்­ளன.