மலாக்கா கேளிக்கை பூங்காவில் சிறுமி மரணம்

மலாக்கா கேளிக்கை பூங்காவில் சிறுமி மரணம்

1 mins read
6a5d6fbf-2a2f-4e25-a765-205f53450a68
-

மலாக்கா: மலே­சி­யா­வின் மலாக்கா மாநி­லத்­தில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்­றில் ஒரு எட்டு வயது சிறுமி மூழ்கி உயி­ரி­ழந்­தார். அந்­தப் பூங்­கா­வில் உள்ள 'வேவ் பூல்' எனப்­படும் செயற்கை அலை­கள் உரு­வாக்­கப்­படும் நீச்­சல் குளத்­தில் சிறுமி நேற்று மரணமடைந்தார்.

ஜோகூ­ரைச் சேர்ந்த அந்­தச் சிறுமி தனது அண்டை வீட்­டா­ரு­டன் ஆலோர் காஜா­ பகுதிக்குச் சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்­ட­போது அச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. அவ­ரின் பெயர் சோஃபியா ஹானிஸ் டானியா ஜமா­லு­தீன் என்று அப்­பகு­தி­யின் காவல்­து­றை­ அதிகாரிகள் அடை­யா­ளம் கண்­டுள்­ள­னர்.

அவர் கோத்தா திங்­கி­யில் உள்ள சுங்கை துவான்சி ெசடெலி என்ற கிர­மாத்­தைச் சேர்ந்­த­வர்­ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.