வாஷிங்டன்: கடும் குளிர்காலத்தை எதிர்நோக்கிவரும் அமெரிக்காவில் பலரின் பயண ஏற்பாடுகள் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் புயல் அமெரிக்காவைத் தாக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மொன்டானா, அலபாமா உள்ளிட்ட பகுதிகளை மோசமான குளிர் காற்று தாக்கி வருகிறது. சிக்காகோ நகரில் 20 சென்டிமீட்டர் உயரம் வரை பனி பொழியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் அதிகம் வந்து செல்லும் சிக்காகோ போன்ற நகரங்களில் விமானச் சேவைகள் தாமதமடையும் அல்லது ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பிறகு இந்தப் பருவநிலை எரீ, ஒன்டாரியோ ஆகிய ஏரிகளை நோக்கிச் செல்லும். பின்னர் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடுமையாகப் பனி பொழியும் என்று சொல்லப்படுகிறது.

