ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகங்களில் கல்வி பயில பெண்களுக்குத் தடை

1 mins read
baca3872-7ce1-4e05-9b54-353e3c08da4d
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னில் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பெண்­கள் சேர்ந்து கல்வி பயில்­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது, மனித உரிைம மீற­லா­கும் என்று அமெ­ரிக்­கா­வும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­ன­மும் கண்­டித்­துள்ளன.

ஆப்­கா­னிஸ்­தா­னில் தாலி­பான் அமைப்பு சென்ற ஆண்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. அதைத் தொடர்ந்து தனது ஆட்சி கடு­மை­யா­ன­தாக இருக்­காது என்று அந்த அமைப்பு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

எனி­னும், பெண்­க­ளின் வாழ்க்கை முறைக்கு இடை­யூறு விளை­விக்­கும் வகை­யில் தாலி­பான் பல கட்­டுப்­பா­டு­க­ளைச் செயல்­ப­டுத்தி வந்­துள்­ளது.

"நாங்­கள் கூறும் வரை பெண்­க­ளுக்­குக் கல்வி வழங்­கு­வதை நிறுத்­தவும்," என்று ஆப்­கா­னிஸ்­தா­னின் உயர்­கல்வி அமைச்­சர் நெடா முகம்­மது நடீம் கடி­தம் ஒன்­றில் குறிப்­பிட்­டி­ருந்­தார். அந்­தக் கடி­தம் அந்­நாட்­டின் எல்லா அர­சாங்க, தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்­டது.

அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வனத்­திடம் தடை குறித்த விவ­ரத்தை உறு­திப்­ப­டுத்­தி­னார்.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பல பெண்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாயினர். வருத்தத்தில் பலர் நண்பர்களை அணைத்தபடி அழுதனர், கதறினர்.

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவைகளைப் போன்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் கூறினர்.