நிலச்சரிவு: 7 மீ. ஆழத்திலிருந்து நான்கு உடல்கள் மீட்பு; மூன்று பேரை மீட்க முயற்சி

நிலச்சரிவு: 7 மீ. ஆழத்திலிருந்து நான்கு உடல்கள் மீட்பு; மூன்று பேரை மீட்க முயற்சி

2 mins read
56e159d2-2416-447e-aa18-cc8e950b4f4e
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கெண்­டிங் பகு­தி­யில் உள்ள பாத்­தாங் காலி என்ற இடத்­தில் நிகழ்ந்த நிலச்­ச­ரி­வில் இருந்து மேலும் நான்கு உடல்­கள் மீட்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து அந்­தப் பேரிடரில் மர­ணம் அடைந்­த­வர்­களின் எண்­ணிக்கை 30 ஆகி விட்டது என்று தேசியப் பேரி­டர் நிர்­வாக முகவை தெரி­வித்­தது.

இன்­ன­மும் மூன்று பேரைக் காண­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

புதி­தாக மீட்­கப்­பட்ட உடல்­களில் இரண்டு உடல்­கள் சிறார்­க­ளின் உடல்­கள். ஓர் ஆட­வ­ரின் உட­லும் ஒரு மாதின் உட­லும் மீட்­கப்­பட்­ட­தாக தீய­ணைப்பு, மீட்­புப் படை அதி­கா­ரி­கள் கூறி­னர் என்று தி ஸ்டார் செய்­தித்­தாள் தெரி­வித்­தது.

சம்­ப­வம் நிகழ்ந்த இடத்­தில் நேற்று ஏழா­வது நாளாக தேடி, மீட்பு நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்­தன.

நிலச்­ச­ரிவு டிசம்­பர் 16ஆம் தேதி நிகழ்ந்­தது. 30 மீட்­டர் உய­ரத்­தில் இருந்து 450,000 கன அடி மண் அப்­ப­டியே சரிந்­த­தில் கீழே முகாம்­களில் தங்கியிருந்­த 94 பேர் மண்ணுக்­குள் சிக்­கிக்­கொண்­ட­னர். அவர்­களில் 61 பேர் தப்­பி­விட்­ட­னர். 30 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இன்­ன­மும் மூன்று பேரைக் காண­வில்லை. தேடி மீட்­கும் பணி­களில் பல்­வேறு அமைப்­பு­க­ளை­யும் சேர்ந்த சுமார் 650 பேர் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

நிலச்­ச­ரிவு கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிதி­யு­த­வி­யும் ஆத­ர­வும் அளிக்­கப்­படும் என்று மலே­சிய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம் ஏற்­கெ­னவே அறி­வித்துள்ளார்.

அந்­தச் சம்­ப­வத்­தில் மாண்டவர்­களின் குடும்­பங்­க­ளுக்கு 10,000 ரிங்­கிட் (US$2,260) இழப்­பீ­டா­கக் கொடுக்­கப்­படும். உயிர் பிழைத்­த­வர்­க­ளுக்கு 1,000 ரிங்­கிட் வழங்­கப்­படும் என்­றும் பிர­த­மர் தெரி­வித்­தார். இன்னமும் காணாமல் போயிருக்கும் மூவரைத் தேடும் பணி தொடர்கிறது.

நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில் 7 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்புப் படையினர் மேலும் நான்கு உடல்களைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தனர். படம்: டுவிட்டர்