சிலாங்கூரில் கோழி முட்டை பற்றாக்குறை

சிலாங்கூரில் கோழி முட்டை பற்றாக்குறை

1 mins read
6acec6ac-7855-4006-abd1-94515b530a4c
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லத்­தில் பெரும் பாலும் பெட்­டா­லிங் ஜெயா­வில் 110 சந்­தை­கள், சிறு பகு­தி­வா­ரிக் கடை­கள், சில்­ல­றைக் கடை­கள், சிறிய அங்­கா­டிக்­க­டை­கள் ஆகி­ய­வற்­றில் 40% கடை­களில் முட்­டைத் தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக வட்­டா­ரத் தக­வல்­கள் தெரிவித்தன.

அடிப்­ப­டைத் தேவை­கள் தொடர்­பில் அம­லாக்க அதி­கா­ரி­கள் அந்த மாநி­லம் முழு­வ­தும் நான்கு நாள் சோதனை நடத்­தினர்.

அதை­ய­டுத்து இந்த நில­வ­ரம் தெரி­ய­வந்­துள்­ளது. சில்­லறை வர்த்­த­கர்­கள் 2022ல் பல மாதங்­களில் முட்டை பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கி­னர். மலே­சி­யர்­கள் ஒவ்­வொரு மாத­மும் சரா­ச­ரி­யாக 968 மில்­லி­யன் கோழி முட்­டை­களைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள்.