'நான் விடைபெறுகிறேன்' என்று செய்தி அனுப்பிய விண்கலம்

'நான் விடைபெறுகிறேன்' என்று செய்தி அனுப்பிய விண்கலம்

1 mins read
6584d0ee-0694-47a4-a062-f91bf34c2661
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வின் நாசா அமைப்பு, 2018ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி செவ்­வாய் கிர­கத்­துக்கு 'இன்­சைட்' என்ற விண்­கலத்தை அனுப்­பி­யது.

அது, ஆறு மாதம் பய­ணம் செய்து 2018 நவம்­பர் 26ஆம் தேதி செவ்­வாய் கோளில் தரை­யி­றங்கி ஆய்­வுப் பணி­யைத் தொடங்­கி­யது.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக பல்­வேறு புகைப்­ப­டங்­களைப் பூமிக்கு அனுப்­பி­யது.

செவ்­வாய் கிரக நிலப்­பரப்பைத் துளை­யிட்­டும் ஆய்வு செய்­தது. இந்­நி­லை­யில், செவ்­வாய் கிரக மணல் புய­லால் இன்­சைட் விண்­கலத்­தின் சூரி­ய­சக்தி தக­டு­கள் மூடப்­பட்­டதால், தனக்­குத் தேவை­யான மின்­சக்­தியை அத­னால் உரு­வாக்­கிக் கொள்ள முடி­ய­வில்லை.

கொஞ்­சம் கொஞ்­ச­மாக இன்சைட் பலம் குறைந்து வந்­தது.

இந்­நி­லை­யில், இந்த ஆண்டு இறு­தி­யில் இன்­சைட்­டின் எல்லா செயல்­பா­டு­க­ளை­யும் நிறுத்­தி­விட நாசா முடிவு செய்து அதற்­கான அறி­விப்­பு­களை வெளி­யிட்­டது.

இன்­சைட் விண்­க­லம் இரண்டு மடங்கு அதி­க­மா­கப் பணி­யாற்றி இருப்­ப­தாக நாசா கூறி­யது.

கடை­சி­யாக இன்­சைட் விண்­கலம் புகைப்­ப­டம் ஒன்றை அனுப்பி, தன்­னிலை விளக்­கம் ஒன்­றை­யும் அளித்­தது.

"என்­ சக்தி குறைந்­து­விட்­டது. அநே­க­மாக நான் அனுப்பும் கடைசி படம் இது­தான். என்­னைப் பற்றி இனி கவ­லைப்­பட வேண்­டாம்.

"செவ்­வாய் கிர­கத்­தில் எனது வாழ்க்கை பிரிச்சினை இன்றி, பயன் அளிப்பதாக இருந்து வந்­தது. இத்­து­டன் விடை­பெ­று­கி­றேன் நன்றி," என அச்செய்தி கூறியதாக நாசா­தெரிவித்துள்ளது.