மணிலா: தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுகள் அமைந்திருக்கும் இடத்தில் ஆட்கள் இல்லாத நான்கு இடங்களில் கட்டுமானப் பணிகளைச் சீனா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சர்ச்சைக்கிடமான அந்தத் தீவுப் பகுதியில் தனது ராணுவ பலத்தைக் கூட்டப் போவதாக பிலப்பீன்ஸ் தெரிவித்தது. சீனாவின் கட்டுமானப் பணிகள் நடப்பதாகக் கூறப்படும் இரு இடங்கள் தனது இடங்கள் என்று பிலிப்பீன்ஸ் கூறுகிறது. அங்கு ராணுவ நிலைகளை பலப்படுத்தும்படி தற்காப்பு அமைச்சு படைகளுக்கு உத்தரவிட்டது.

