பாரிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு, மூவர் மரணம்

1 mins read
e38992b7-b064-45c0-abc0-7d797b0411c7
பாரிஸ் நகரின் மத்திய வட்டாரத்தில் தாக்குதல் நேர்ந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் மாண்டனர்.

மேலும் சிலர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் பாரிசின் மத்திய வட்டாரத்தின் ஸ்ட்ராஸ்பொர்க்-செயின்ட டெனிஸ் பகுதியில் நேர்ந்தது.

சந்தேக நபரான 69 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் சந்தேக நபரைக் கைதுசெய்தபோது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதத்தையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.