இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி மாண்டார்.
வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
வெடிக்கப்பட்ட வாகனத்தில் ஓர் ஆடவரும் ஒரு மாதும் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

