இந்தோனீசிய விளையாட்டரங்கு கலவரம்: அதிகாரிகள்மீது வழக்கு தொடுக்கும் குடும்பங்கள்

இந்தோனீசிய விளையாட்டரங்கு கலவரம்: அதிகாரிகள்மீது வழக்கு தொடுக்கும் குடும்பங்கள்

1 mins read
8b4e526d-df71-4ca3-887d-5efd1db35216
கஞ்சுருஹான் விளையாட்டரங்கில் கடந்த அக்டோபர் மாதம் கலவரம் மூண்டதைத் தொடர்ந்து 135 பேர் மாண்டனர். படம்: இபிஏ -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டரங்கு ஒன்றில் நிகழ்ந்த கலவரத்தில் மாண்டோரின் குடும்பத்தார் அதிகாரிகள்மீது வழக்கு தொடரவுள்ளனர்.

ஜாவா மாநிலத்தின் மாலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் விளையாட்டரங்கில் கடந்த அக்டோபர் மாதம் அச்சம்பவம் நிகழ்ந்தது.

உலகளவில் விளையாட்டரங்கு ஒன்றில் நேர்ந்த ஆக மோசமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் அதில் 135 பேர் மாண்டனர்.

உயிரிழந்தோரில் 40 சிறுவர்களும் அடங்குவர்.

திடலில் கலவரம் மூண்டதைத் தொடர்ந்து பலர் மிதிபட்டு உயிரிழந்தனர்.

விளையளாட்டரங்கில் தங்கள் உறவினர்கள் மாண்டதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று கூறும் ஏழு இந்தோனீசிய குடும்பங்கள் அவர்கள்மீது வழக்கு தொடரவுள்ளனர்.