இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர், சோதனைச் சாவடியில் நிற்காமல் காரை வேகமாகச் செலுத்தினர். காவல்துறையினர் துரத்திச் சென்றபோது காரிலிருந்த வெடிகுண்டை அவர்கள் வெடிக்கச் செய்தனர்.
இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு அதிகாரிகளும் பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் காருக்குள் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தைக் குறிவைத்துச் சென்ற அந்த காரில் நிறைய வெடிபொருள்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. சரியான நேரத்தில் மிகப் பெரிய தாக்குதல் தடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

