பாரிஸ் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி, ஒருவர் கைது

பாரிஸ் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி, ஒருவர் கைது

1 mins read
1b52b395-d8d7-4445-9ada-67d52bc56829
-

பாரிஸ்: பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­சின் மத்­திய வட்­டா­ரத்­தில் துப்­பாக்­கிக்­கா­ரன் சுட்­ட­தில் மூவர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் சிலர் காய­ம­டைந்­த­னர். அவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குர்­திய கலா­சார நிலை­யத்­துக்கு அருகே நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டில் 69 வயது ஆட­வ­ரைக் காவல்­துறை தடுத்து வைத்­துள்­ளது. தாக்­கு­த­லில் அவ­ருக்­குத் தொடர்பு இருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அவரிடமிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே ரயில் நிலையம் அமைந்திருப்பதாகவும் அது பரபரப்பான பகுதி என்றும் கூறப்பட்டது.

ஏழு அல்­லது எட்­டு­முறை துப்­பாக்­கி­யால் சுட்ட சத்­தத்­தைக் கேட்க முடிந்­த­தாக சம்­பவ இடத்­தில் இருந்த பெண் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.