அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கிறிஸ்துமஸ் வேண்டுதல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கிறிஸ்துமஸ் வேண்டுதல்

1 mins read
52f3d96d-51d7-44cf-a395-1935270ce97e
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நாட்டு மக்­க­ளுக்கு கிறிஸ்­து­மஸ் தின உரையை ஆற்­றி­யுள்­ளார்.

வெள்ளை மாளி­கை­யில் பேசிய அவர், அதி­கம் பிள­வு­பட்­டி­ருக்­கும் அமெ­ரிக்­கா­விற்கு புதிய தொடக்­கம் அமை­யட்­டும் என்று வாழ்த்­தி­னார்.

நாட்­டின் அர­சி­ய­லை பாதித்து, மக்­க­ளுக்கு இடையே பகை­மை­யைத் தூண்­டும் 'நச்சு' நீங்­க­வேண்­டும் என்று தாம் வேண்­டிக்­கொள்­வ­தாக அதி­பர் பைடன் குறிப்­பிட்­டார்.

அவ­ரது உரை, உற­வைப் புதுப்­பித்­தல், ஒற்­றுமை ஆகிய அம்­சங்­களை மையப்­ப­டுத்தி அமைந்­தி­ருந்­தது. "ஜன­நா­ய­கக் கட்சி, குடி­ய­ர­சுக் கட்சி என்ற அடை­யா­ளங்­க­ளுக்கு அப்­பால் சக அமெ­ரிக்­கர்­கள், சக மனி­தர்­கள் என்ற முறை­யில் மதிப்பு, மரி­யாதை ஆகி­ய­வற்­றுக்கு முக்­கி­யத்­து­வம் தர வேண்­டும்," என்று கூறிய அவர், கிறிஸ்­து­மஸ் பண்­டி­கைக் காலத்­தில் அன்­பைப் பரப்­பும்­படி அமெ­ரிக்­கர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.